பதிவு செய்த நாள்
05
அக்
2022
11:10
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நேற்று, பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், கொலு பூஜை நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகி அம்மன் கோவிலில், நவராத்திரி கொலு வைக்கப்பட்டிருந்தது. செல்வ நாயகி அம்மன், சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சொக்கம்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் நஞ்சையன் தலைமையில் மனதுக்கு மகிழ்ச்சி தருவது நகர வாழ்க்கையே, என்றும், கிராமத்து வாழ்க்கை என்றும் பட்டிமன்றம் நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு செல்வ விநாயகருக்கு அபிஷேக பூஜையும், மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தலும், சிறப்பு பஜனை மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது.