விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி 10ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 11:10
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் தினமும் அம்மன் வொவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். நேற்றைய விழாவில் மதுரபாஷினி அம்மன் பாத தரிசனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.