திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : 5 லட்சம் பேர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 07:10
திருப்பதிதிருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் போது, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
திருமலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் போது, தேவஸ்தானம் தர்ம தரிசனத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து, அனைத்து விதமான தரிசனங்களையும் ரத்து செய்ததால், பிரம்மோற்சவ நாட்களில், ஐந்து லட்சத்து 68 ஆயிரத்து 735 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கை வாயிலாக 20 கோடியே 43 லட்சத்து 9,400 ரூபாய் வருவாய் கிடைத்துஉள்ளது.பிரம்மோற்சவத்தின் போது 20 லட்சத்து 99 ஆயிரத்து 96 பக்தர்கள் அன்னதானம் உண்டனர்; இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 816 பேர் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். இந்த பிரம்மோற்சவ நாட்களில் தினசரி 3,750 ஸ்ரீவாரி சேவார்த்திகள் பக்தர்களுக்கும், ஏழுமலையானுக்கும் சேவைகள் செய்தனர். இதே நாட்களில் 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 சிறிய லட்டுகளும், 29 ஆயிரத்து 968 பெரிய லட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.