செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் விஜயதசமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 06:10
செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் விஜயதசமி விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் நவராத்திரி விழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டி துவங்கியது. 26ம் தேதி முதல் இம்மாதம் 4ம் தேதி வரை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும், காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணிவரை சிறப்பு ஹோமும், மாலை மணிக்கு மகா அர்ச்சனையும், மகா தீப வழிபாடும் நடந்து வந்தது. நேற்று விஜய தசமியை முன்னிட்டு காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், விசேஷ ஹோமமும் நடந்தது. மாலை 5 மணிக்கு லலிதா செல்வாம்பிகைக்கு கடந்த 10 நாட்களாக நடந்த சிறப்பு ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு அபிஷேகமும், மகா அலங்காரமும், அர்ச்சனை, விசேஷ தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.