ஜம்மு - காஷ்மீர் சாரதா கோவிலுக்கு பஞ்சலோக விக்ரஹம் அனுப்பி வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 07:10
சிக்கமகளூரு-ஜம்மு - காஷ்மீரின் தீத்வால் பகுதியில் கட்டப்பட்டு வரும் சாரதா கோவிலுக்கு, கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் இருந்து நேற்று, பஞ்சலோக ஸ்வாமி விக்ரஹம் அனுப்பப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் தீத்வால் பகுதியில் சிருங்கேரி சாரதா பீடம் சார்பில், சாரதா கோவில் கட்டப்படுகிறது.இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு, சிக்கமகளூரில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்தில் பஞ்சலோக ஸ்வாமி விக்ரஹம் தயாரிக்கப்பட்டது.இந்த விக்ரஹத்துக்கு, இளைய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ விதுசேகரபாரதி சுவாமிகள் நேற்று சிறப்பு பூஜை செய்தார்.பின், ஜம்மு - காஷ்மீர் சாரதா கோவில் கமிட்டியிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த விக்ரஹம், விரைவில் அங்குள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும். அங்கு உள்ள ஹிந்துக்களுக்கு பெரிய வரப் பிரசாதம் என்றே கூறலாம்.ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் சாரதா கோவிலுக்கு, சிருங்கேரியில் இருந்து அனுப்பப்பட்ட பஞ்சலோக ஸ்வாமி விக்ரஹத்திற்கு, மடத்தின் இளைய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ விதுசேகரபாரதி சுவாமிகள் நேற்று சிறப்பு பூஜை செய்தார்.