பதிவு செய்த நாள்
06
அக்
2022
07:10
செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த, வேண்பாக்கம் கிராமத்தில், ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், ஜெய் ப்ரத்யங்கிரா கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும். இந்த ஆண்டு, செப்., 26ல் நவராத்திரி விழா துவங்கி, தினமும், ராகு கால பூஜை மற்றும் பாதகமல பூஜை நடந்தது.ஜெய் ப்ரத்யங்கிரா, பல்வேறு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள், தினமும் சிறப்பு யாகத்தை நடத்தினார். நவராத்திரி நிறைவு நாளையொட்டி, மஹா சிறப்பு யாகத்தை சுவாமிகள் நடத்தினார்.ஒன்பது நாளும், யாகத்திற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு, பீடத்தின் சார்பாக, புடவை, மங்கல பொருட்கள் மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.