திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோட்சகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 07:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோச்சவத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோச்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு நித்திய கால பூஜை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேததேகளிச பெருமாள், புஷ்பவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் யாகசாலையில் எழுந்தருளினர். பகல் 10:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு பவித்திர மாலைகள் சாத்தப்பட்டு மகா சாந்தி ஹோமம் நடந்தது. 12:30 மணிக்கு பூர்ணகுதி, பிரசாத விநியோகம் நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீசராமானுஜாச்சாரியர் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகளன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.