சித்தர் வழிபாட்டு தளத்தின் அருகிலேயே இறைச்சிக்கடை நடத்துவதால் பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 11:10
அவிநாசி: அவிநாசி அடுத்த சேவூரிலிருந்து நம்பியூர் செல்லும் சாலையில் தெப்பக்குளம் வடக்கு வீதி பகுதியில் பிருந்தாவனம் ஸ்ரீ முத்துக்குமாரர் சுவாமி ஜீவசமாதி வழிபாட்டு தளம் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் காலை, மாலை பூஜைகள் பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் மற்றும் வியாழன் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.கோவை ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிருந்து ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் வழிபாட்டில் இருந்து 20 அடி தூரத்திலேயே புளியம்பட்டியைச் சேர்ந்த சம்பத் என்பவர் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வருகிறார் மேலும் இறைச்சி கழிவுகளை அருகிலேயே போட்டுச் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் சித்தர் ஜீவசமாதி வழிபாட்டுத்தளத்தின் அருகிலேயே இறைச்சிக் கடையை நடத்துவதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைகின்றனர்.
இது குறித்து உள்ளூரில் வசிக்கும் பக்தர் ஒருவர் கூறுகையில் வழிபாட்டுத்தலம் அருகில் இறைச்சி கடை நடத்துவதற்கு ஊராட்சி நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை. வழிபாட்டுத்தளத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தான் இது போன்ற கடைகள் அமைக்கலாம் என்ற விதிமுறைகள் இருந்த போதிலும் ரோட்டின் ஓரத்திலேயே வருவாய்க்காக சேவூர் ஊராட்சி நிர்வாகம் இது போன்ற ஒரு செயலை செய்துள்ளது பக்தர்களை மிகவும் வேதனைப்படுத்தக்கூடிய செயலாகும் என்றார்.