திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழாஊஞ்சல் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இக்கோயில் நவராத்திரி விழா செப்.26ல் காப்புகட்டுதல் அலங்காரத்துடன் துவங்கியது.கொலு மண்டபத்தில் கொலு வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பக்தர்களும் கொலு வாங்கி கொலு மண்டபத்தில் வைத்தனர்.தினமும் மாலை அம்மன் ராஜ அலங்காரம்,சிவபூஜை ,ராஜராஜேஸ்வரி ,துர்கை,சரஸ்வதி அலங்காரங்களில் அருள் பாலித்தார்.பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அலங்கார பூஜைகளில் பங்கேற்றனர். நவராத்திரி 10ம் நாள் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருள முக்கிய நிகழ்ச்சியான அம்பு எய்தல் செல்லாண்டியம்மன் கோயிலில் நடந்தது விழாவின் கடைசி நாளான நேற்று கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் நடந்ததுஅம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். *திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்.26ல் துவங்கியது. அம்மன் தினமும் அம்பாள், ஈஸ்வரி, மீனாட்சி ,லட்சுமி,காளிங்கநர்தனம், மகிஷசூரமர்த்தினி உள்ளிட்ட அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அக்.5ல் காலை 108 சங்கபிஷேகம் நடந்தது.மாலைஅம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக அம்பு எய்தல் விழா நடந்தது.நேற்று ஊஞ்சல் உற்ஸவ விழா நடந்தது. நகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.