பதிவு செய்த நாள்
07
அக்
2022
02:10
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர், பூவரசந்தோப்பு, அன்னை ரேணுகாம்பாள் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது
.நடப்பு ஆண்டுக்கான நவராத்திரி விழா, கடந்த 26ல் துவங்கியது. இதில், தினமும், அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வந்தார். ஐந்தாம் நாள் உற்சவமான, செப்., 30ல் சீமந்தபுத்திரி விழா விமரிசையாக நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரம் நடந்தது.இதில், பிள்ளைப்பேறு பெற விரும்பிய திருமணமான பெண்களும், திருமண வரம் வேண்டி திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திரளானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.