Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி பவுர்ணமி ... திறந்தவெளியில் வெயிலிலும், மழையிலும் நனையும் பழமை வாய்ந்த ஆதி சிவலிங்கம் திறந்தவெளியில் வெயிலிலும், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவிலில் வெளிநாட்டினர் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோவிலில் வெளிநாட்டினர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

08 அக்
2022
07:10

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் கோவிலில் 9 நாடுகளைச் சேர்ந்த 30 வெளிநாட்டினர் சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவிலில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமாரசுவாமி, 18 சித்தர்களின் முதன்மையான தன்வந்திரி தனித்தனி சன்னதிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு, இங்கு வழங்கப்படும் திருச்சாந்து உருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமடையும் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நேற்று மாலை வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர் சுவாமி  பிரணவானந்தா தலைமையில் தைவான், ஸ்பெயின், கஜகஸ்தான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, பங்களாதேஷ், அர்ஜென்டினா, உருகுவே ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் சுவாமி, அம்பாள், செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். துரை குருக்கள் தரிசனம் செய்து வைத்து, பிரசாதம் வழங்கினார். தரிசனத்திற்கான ஏற்பாடுகளை வாழும் கலை ஆசிரியர் சிவக்குமார் செய்திருந்தார். முன்னதாக வெளிநாட்டினர் நவகிரக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar