10ம் தேதி காலை வெள்ளி சப்பரத்தில் இலஞ்சி குமரன் பவனியும், சுவாமி, அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் காட்சியும் நடந்தது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நடந்தது. 12ம்தேதி பஞ்மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 5.20 மணிக்கு விநாயகர், முருகர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு பக்தர்கள் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளின் வழியாக வந்து நிலையம் வந்தடைந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தேரோட்ட விழாவில் கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், .பாஜ., செந்தூர்பாண்டி, திருமுருகன், பிலவேந்திரன், அசோக் பாண்டியன், அன்னையா பாண்டியன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 15ம் தேதி நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ம் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.