வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே நீரேத்தான், மேட்டுநீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. விழாவையொட்டி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அய்யனாருக்கு சந்தன காப்பு, வெள்ளிக்கவச அலங்காரம், ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பெட்டி எடுப்பு மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அனுமதி இல்லாததால் எருதுகட்டு விழா நடத்தப்படவில்லை. இதனால் காளை வளர்ப்போர் அதிருப்தி அடைந்தனர். எருதுகட்டு நடக்கும் தாதம்பட்டி மந்தைக்கு வரும் வழிகளை தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்தனர். காளைகளை அலங்கரித்து கிராம கோயில்களுக்கு அழைத்து சென்று வழிபட்டனர்.