Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ... சோமனூரில் ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சி பக்தர்கள் பரவசம் சோமனூரில் ஜோதிர் லிங்க தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமாவாசை அன்று சூரிய கிரஹணம் எப்போது தர்ப்பணம் செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
அமாவாசை அன்று சூரிய கிரஹணம் எப்போது தர்ப்பணம் செய்ய வேண்டும்?

பதிவு செய்த நாள்

18 அக்
2022
07:10

அமாவாசை அன்று சூரிய கிரஹணம் நிகழ உள்ளதால், அன்று இரண்டிற்கும் தனித்தனி தர்ப்பணம் செய்யாமல் ஒரே தர்ப்பணமாக செய்யலாம் என, சாஸ்திர பண்டிதர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டிற்கு, 96 தர்ப்பணங்கள் உண்டு என்றும், அந்த நாட்களில், பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்றும், தர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது. தமிழ் மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, மகாளய பட்சத்தின், 15 நாட்கள், கிரகண காலங்கள், திதி முதலான நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும்; முன்னோர்களை வணங்கவேண்டும்.

காகங்களுக்கு உணவிட வேண்டும்; இயலாதவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என, ஞானநுால்களும் அறிவுறுத்துகின்றன. வரும் அமாவாசை அன்று, சூரிய கிரஹணம் நிகழ்கிறது. இதனால், இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்று கேள்வி பரவலாக எழுந்துள்ளது. வேத விற்பன்னர்கள் சிலர், இரண்டு வேளையும் தர்ப்பணம் செய்யலாம் என பொதுவாக கருத்து தெரிவித்தாலும், அன்று ஒரே தர்ப்பணம் மட்டும் போதுமானது என, சாஸ்திர பண்டிதர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது: தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை வருகிறது. அன்றே சூரிய கிரஹணம் நிகழ்கிறது. இரண்டிற்கும் தர்ப்பணம் செய்வது நம் பழக்கத்தில் உள்ளது. அதனால், இரண்டிற்கு தனித்தனியே தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல தர்மசாஸ்திர நுாலில் இரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்தால், சூரிய கிரஹணம் பிடிக்கும் போது மட்டும் தர்ப்பணம் செய்தால் போதும் என கூறுகிறது. அவ்வாறு செய்யும்போது, அமாவாசை தர்ப்பணம் செய்த பலன் அதில் அடக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, 25ம் தேதி மாலை 5:15 மணிக்கு சூரிய கிரஹணம் துவங்கிய பின், ஸ்நானம் செய்து, தர்ப்பணம் செய்தால் போதும். ஆனால், சிறார், முதியவர், நோய்வாய் பட்டவர் தவிர மற்றவர்கள் அன்று முழுதும் உணவு அருந்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.  - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar