கம்பம்: கம்பத்தில் கம்பராயப்பெருமாள் கோயிலில் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கம்பம் சிவனடியார்கள் மற்றும் திருவாடுதுறை ஆதீனம் நடந்தும் பன்னிரு திருமுறை மற்றும் சைவ சித்தாந்த மையத்தின் மாணவ அடியார்கள் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவார பாடல்களை பண், தாளத்துடன் பாடினார்கள். இறுதியில் மாகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் ராமனாதன் மற்றும் சிவனடியார்கள் ராமகிருஷ்ணன், இளையராஜா, பரசுராமன், சுரேஷ், பாபு, சுகுமாறன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.