நாகர்கோவில்: ஐப்பசி மாத பூஜை துவங்கியதை அடுத்து, கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாத பூஜை துவங்கியதை அடுத்து, கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அக்., 22 இரவு வரை பூஜைகள் நடந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அடுத்து ஒரு நாள் இடைவெளியில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக அக்., 24 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 25 ல் பூஜைகள் முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டலகால பூஜைகளுக்காக நவ., 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.