மூலவர், தல விருட்சம், குளம் ஆகியவை ஒரு கோயிலுக்கு முக்கியமானவை. நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவத்தலங்களுக்குச் சென்று பாடுவது வழக்கம். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயிலில் தலவிருட்சமான பலாமரத்தின் மீது பத்து பாடல்கள் பாடியுள்ளார். குற்றாலம் என்னும் சொல்லை வாய் தவறிச் சொன்னாலும் முக்தி கிடைக்கும்.