திருவண்ணாமலை : வந்தவாசி அடுத்த கூழமந்தல் ஏரி பகுதியில் உள்ள பேசும் பெருமாள் கோவிலில், ஐப்பசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருமஞ்சனம் அலங்காரத்தில் பேசும் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.