சேவூர் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பாலாய திருப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2022 10:10
அவிநாசி: சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பாலாய திருப்பணி நடைபெற்றது.
அவிநாசி அடுத்த சேவூரில் வாலிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய திருப்பணிகள் தொடங்கியது .கொங்கேழு சிவஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும் நடுச் சிதம்பரம் என போற்றப்படும் பாடல் பெற்ற தலமாகவும் அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில் உள்ளது. 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 2004 ம் ஆண்டு ஆலய பணிகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவ ஸ்தலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது ஐதீகம். இதனைத் தொடர்ந்து18 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் தொடங்க செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரர் முன்னிலையில் நிகழ்ச்சிகள் பெற்றது. வாஸ்து ஹோமம் வாஸ்து சாந்தி காலகர்ஷனம், கும்ப அலங்காரம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வேதபாராயணம், பூர்ணாகுதி,தர்ப்பணத்தில் கலைகளை ஆவாகனம் செய்தல் நடைபெற்று மகாதீபாரதனையும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.