நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2022 07:10
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலையில் விமரிசையாக நடந்தது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி, அம்பாளுக்கு தினமும் காலை, மாலை அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் 22ம் தேதி திருநெல்வேலி டவுன் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. நேற்று அதிகாலை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஐப்பசி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி,அம்பாள் ரத வீதி உலா வந்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் உற்சவம் மற்றும் மறு வீடு பட்டினப்பிரவேசம் நடக்கிறது.