23 அடி உயர நடராஜர் சிலை ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் திறப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2022 07:10
வேலுார்: வேலுார் தங்கக்கோவிலில் வளாகத்தில், 23 அடி உயரத்திலான நடராஜர் சிலையை, சக்தி அம்மா திறந்து வைத்தார். வேலுார், ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், 15 டன் எடையில், 23 அடி உயரம், 17 அடி அகலத்தில் ஐம்பொன்னாலான நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை மக்கள் பார்வைக்காக, சக்தி அம்மா நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இவ்வளவு பெரிய நடராஜர் சிலை உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்த சிலை ஆனந்த தாண்டவத்தில் அமைந்துள்ளது. தங்கக்கோவில் விருந்தினர் தங்கும் விடுதி வளாகத்தில், தற்காலிகமாக சிலை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நடராஜருக்கு தனி கோவில் அமைக்கப்பட்டு, அங்கு பிரதிஷ்டை செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார். தொடர்ந்து நடராஜர் சிலைக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜை செய்தார்.