பதிவு செய்த நாள்
24
அக்
2022
07:10
தர்மத்தை விட்டு கொடுக்க கூடாது உள்ளிட்ட நல்ல விஷயங்களை நாம் செய்ய வேண்டும் என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: முதலில் தமிழ், தாய் மொழியை காக்க வேண்டும். இன்றைய மொழியை கற்க வேண்டும் என்ற அபிப்பிராயத்துடன் தான் சொல்கிறோம். தாய் மொழியை பாதுகாக்க வேண்டும். தாய் மொழி என்று சொன்னால் வெறும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் மட்டுமல்ல. தாய் மொழி - ஒரு தாயினுடைய மொழி எப்படி இருக்குமோ, அதுபோன்று இருக்கக்கூடிய மொழியை நாம் காக்க வேண்டும்; அதுவும் தேவைப்படுகிறது. பொறுப்பான வார்த்தைகள், பொறுமையுடன் கூடிய வார்த்தைகள், கடமை உணர்வை போதிக்கக்கூடிய வார்த்தைகள், இணைந்து செயலாற்றக்கூடிய வார்த்தைகள், நீண்ட காலத்திற்கும் அன்பு மாறாத வார்த்தைகள், சிக்கனம், சேமிப்பு, சேவையை உணர்த்தக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். பக்தியையும், தன்னலம் கருதாத, பிறர் நலம் காணக்கூடிய சங்கல்பம், இது போன்று இந்திய மண்ணிலே குடும்ப வாழ்க்கை முறையிலேயே இருக்கக்கூடிய தாயின் பண்புகளும், பொறுப்புகளும், மதிப்பையும் காப்பாற்றக்கூடிய, தாய் மொழியை நாம் காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -