அக்., 25ல் சூரிய கிரகணம் : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2022 05:10
ராமேஸ்வரம்: அக்., 25ல் சூரிய கிரகணம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட உள்ளது.
அக்., 25ல் மதியம் 12 மணிக்கு மேல் சூரிய கிரகணம் துவங்குவதால், அன்று ராமேஸ்வரம் திருக்கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடைதிறந்து அதிகாலை 5 முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். இதனைதொடர்ந்து கால, சாயரட்சை பூஜை நடக்கும். பின் மதியம் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு மாலை 4 :32 மணிக்கு கோயில் இருந்து தீர்த்தவாரி சுவாமிகள் புறப்பாடாகி, மாலை 5:52 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்த வாரி உற்சவம் நடக்கும். பின் கோயில் ரதவீதியில் தீர்த்தவாரி சுவாமிகள் வீதி உலா நடக்கும். மாலை 6:30 மணிக்கு கோயில் நடை திறந்ததும் சுவாமிக்கு கிரகண அபிஷேகம், அதனை தொடர்ந்து பூஜைகள் நடக்கும். எனவே பக்தர்கள் அன்று அதிகாலை 5 முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 7 முதல் இரவு 8:30 மணி நடை சாத்தப்படும் வரை சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.