ஆக்கிரமிப்பில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வளாக கேட் அவதியில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2022 06:10
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அரசு கோயிலின் வளாக கேட் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட, மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இது நூற்றாண்டு புகழ்வாய்ந்தது. கோயில் வளாகத்தில் உள்ள காம்பவுண்டு சுவற்றில் 3 கேட்டுகள் உள்ளன. இதில் கோபுர பகுதியில் உள்ள மெயின் கேட் மட்டும் புழக்கத்தில் உள்ளது. மற்ற இரண்டு கேட்டுகளும் பூட்டப்பட்டுள்ளன. இதில், திருச்சுழி ரோடு அருகேயுள்ள கேட் பல வருடங்களாக திறக்கப்படாமல் உள்ளது இதனால் இந்த கேட் இருக்கும் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டது. அருகில் உள்ள கடைகளின் புழக்கத்திற்கும், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. கூட்ட நேரங்களில் கோயிலின் ஒரு கேட் வழியாக செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கேட்டை திறந்து வைக்காமல் பக்தர்களை சிரமத்திற்கு ஆளாக்குகிறது கோயில் நிர்வாகம். ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் செல்லும் வகையில், திருச்சுழி ரோடு பகுதியில் உள்ள கேட்டை திறந்து வைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.