Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜசோழனின் 1037வது சதயவிழா: பெரியகோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜராஜசோழனின் 1037வது சதயவிழா: பெரியகோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

25 அக்
2022
03:10

தஞ்சாவூர், தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.

தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய நட்சத்திர நாளில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு சதய விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, பெரிய கோவிலில் காலை பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.

சதய விழாவை முன்னிட்டு வரும் நவ.2ம் தேதி பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது. நவ.3ம் தேதி காலை தேவார நுாலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலாவும், மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர்  உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும், இரவு வீதிவுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar