பதிவு செய்த நாள்
26
அக்
2022
03:10
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதியில், தங்க தேரோட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில், தென்திருப்பதி வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. இங்கு தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 5:30 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ர நாமா அர்ச்சனை, சாற்று முறை ஆகியவை நடந்தன. மாலை, 6:00 மணிக்கு மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, தங்கத்தேருக்கும் எழுந்தருளினார். பக்தர்கள், கே.ஜி.டேனிம், கண்ணபிரான் மில்ஸ் ஊழியர்கள் ஆகியோர் தங்கத் தேரை நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். அப்போது வானவேடிக்கை நடந்தது. தேர் நிலையை அடைந்த பின்பு, இரவு ஏகாந்த சேவை நடைபெற்றது.