பதிவு செய்த நாள்
28
அக்
2022
02:10
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சூரசம்ஹார விழாவின் 3ம் நாளில் யாகசாலை பூஜை நடந்தது. தீயவை அழித்து, நல்லவை அருளும் விழாவான, கந்த சஷ்டி விழா, உடுமலை பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களில், கடந்த 25ம் தேதி துவங்கியது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், இவ்விழா
நடந்து வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு யாகசலை வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனையும் இடம் பெற்றது. மாலையில், உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி சன்னதி முன், பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் படித்தனர்.
சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.