பதிவு செய்த நாள்
29
அக்
2022
08:10
திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் நேற்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
திருப்பதியில் தர்ம தரிசனத்திற்கு நேரடியாக டோக்கன்கள் வழங்கும் பணி, ஏப்ரல் 12ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இவை மீண்டும் நவம்பர் 1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்களில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படும். டோக்கன் கிடைக்காதபக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் காத்திருப்பு அறை எண் -2 வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். டிசம்பர் 1 முதல் சோதனை அடிப்படையில் வி.ஐ.பி., பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட உள்ளது. வைகுண்டம் காத்திருப்பு அறையில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் வி.ஐ.பி., பிரேக் தரிசன நேரம் காலை 8:00 மணிக்கு மாற்றப்படும். இதனால், பக்தர்கள் தினமும் திருப்பதியில் தங்கியிருந்து திருமலைக்கு வந்து பிரேக் தரிசனம் செய்யக்கூடும். எனவே, திருமலையில் உள்ள அறைகள் ஒதுக்கீட்டிற்கான நெருக்கடி குறையும்.