ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் படிக்கட்டுகள் சேதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2022 09:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டு கல்கள் சேதமடைந்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீராடி தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதால், மத்திய அரசு சுற்றுலா திட்டத்தில் ரூ. 5 கோடி செலவில் உடைமாற்றும் அறை, குடிநீர் மையம், பொழுதுபோக்குடன் கூடிங நடைமேடை, கடற்கரையில் சிமெண்ட் சிலாப் கல்களில் படிக்கட்டுகள் அமைத்தது. இதில் எந்த திட்டமும் பக்தர்கள் பயன்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கும் நிலையில், தற்போது வீசும் ராட்சத அலையால் கடற்கரையில் உள்ள படிக்கட்டு கல்கள் சேதமடைந்து, தாறுமாறாக கிடக்கிறது. இதனால் வயது மூத்த பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் கடலில் இறங்கி நீராட முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படாமல் தடுக்க சேதமடைந்து கிடக்கும் சிலாப் கல்களை அகற்றி, அக்னி தீர்த்த கடற்கரையில் ஏற்கெனவே இருந்த இயற்கை சார்ந்த மணல் பரப்பை ஏற்படுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.