வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டியில் கிராம காவல் தெய்வம் பூச்சி மலையாண்டி கோயில் உள்ளது. இக்கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து நாககன்னி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகளை பூஜாரி ஆதி முத்துக்குமார் செய்தார். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பேரிச்சம்பழம், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கிராம மக்கள் செய்தனர்.