காளஹஸ்தி பகுதியில் நாகசதுர்த்தி: நாக தேவதைகளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2022 07:10
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி பகுதியில் இன்று நாகசதுர்த்தியை யொட்டி பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் கொண்டாடினர். வழக்கம் போல் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து ஐந்தாம் நாள் நாகசதுர்த்தியை பக்தர்கள் வழிபடுகின்றனர்.இன்று சனிக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் புனித நீராடி கோயில்களுக்கு சென்று அங்குள்ள பாம்பு புற்றுகள் அருகில் உள்ள நாக தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர் . மேலும் பக்தர்கள் புற்றின் மீது புதிய புடவையை சமர்ப்பித்து மஞ்சள் குங்குமம் தெளித்து மா விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து நெய் வைத்தியமாக சர்க்கரை பொங்கலை சமர்ப்பித்தனர். பாம்பு புற்றுக்குள் கோழி முட்டை மற்றும் பால் ஊற்றி பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டனர் . மேலும் நாக தேவதைக்கு சிறப்பு பூஜைகளில் தேங்காய் உடைத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். இந்நிலையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள (மூன்றாம் கோபுரம்) திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள நாக( தேவதைகளுக்கு) சிலைகளுக்கு சிவன் கோயில் சார்பில் வேத பண்டிதர்கள் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நாகச் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர் .காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் நாக தேவதைகளை பூஜித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.