கும்பகோணத்தில் துலா ஸ்நானம்: அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2022 07:10
தஞ்சை : கும்பகோணம் வட்டம் கும்பகோணத்திலுள்ள பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் கோயில் துலா ஸ்நான தீர்த்தவாரி மடத்துத்தெரு அருகிலுள்ள காவிரி ஆற்றின் பகவத் படிதுறையில் இந்த மாதம் முழுவதும் [ ஐப்பசி மாதம் ]தினசரி காலை 7மணியளவில் நடைப்பெற்று வருகிறது. இதனை முன்னிட்டு காவிரி பகவத் படித்துறையில் துலா ஸ்நான தீர்த்தவாரியில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அதனை தொடர்ந்து காவிரியில் தீர்த்தவாரியும் நடைப்பெற்றது இதில் பக்தர்கள் பலர் வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தார்கள். தினமும் நடைபெறும் இந்த தீர்த்தவாரியில் பக்கர்கள் ஏதவது ஒருநாள் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது அத்தனை மகத்துவம் நிறைந்த துலா ஸ்நானத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் சகல உடல் பிணி , உள்ளப் பிணி, அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.