திருப்புல்லாணி: திருப்புல்லாணி பாலசுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. மூலவர் பாலசுப்பிரமணியர், விநாயகர், நவக்கிரகங்களுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் உள்ளிட்ட பாடல்களை பாடி பஜனை செய்தனர். பூஜைகளை ஜெகநாதன், ஹேமந்த் குருக்கள் ஆகியோர் செய்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.