சரவணம்பட்டி: காலகாலேசுவரர் கோயிலில் நடக்கும் கந்தர் சஷ்டி விழாவிற்கு, கரட்டுமேடு ரத்தினகிரி சுப்ரமணியர் கோயிலில் வேல் பூஜை, வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு ரத்தினகிரியில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கந்தர் சஷ்டியின்போது சூரசம்ஹார நிகழ்வுகள் நடப்பதில்லை. சஷ்டி விரதம் இருப்போர் இந்த கோயிலில் காப்புக் கட்டுகின்றனர். ஆனால், சூரசம்ஹாரம் ரத்தினகிரியில் நடப்பதில்லை. மாறாக, சர்க்கார்சாமக்குளம் கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோயிலில் நடக்கிறது. ஆனால், ரத்தினகிரி முருகன் கோயிலிலிருந்து தான் தாரகா சூரனையும், சிங்கமுக சூரனையும் வதம் செய்ய வேல் பூஜை செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை ஞாயிறன்று நடக்கும் சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி காலை 11.00 மணி அளவில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு காலகலேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள காலசுப்ரமணியர், சூரனை சம்ஹாரம் செய்து அருள்புரிகிறார். திங்களன்று காலை வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.