ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தாயார் ஊஞ்சல் உற்சவம் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2022 05:10
திருச்சி: மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், தாயார் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் (டோலோத்ஸவம்) நேற்று தொடங்கி (29.10.22) வரும் நவம்பர் 4ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ரெங்கநாச்சியார் நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இந்த நாட்களில் மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.