வடபழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் கோலாகலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2022 09:10
சென்னை: சென்னை வடபழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் உலா வந்து அருள்பாலித்தார். இன்று 30ம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது. "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 1ல் வடபழநி ஆண்டவர் மங்கள கிரி விமானத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 2ம் தேதி சொக்கநாதர்-மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 3ம் தேதி வடபழநி ஆண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும், 4ம் தேதி அருணகிரிநாதர் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் எல். ஆதிமூலம், செயல் அலுவலர் முல்லை ஆகியோர் செய்திருந்தனர்.