கோயம்புத்தூர்: சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டி, கவுமார மடலாயத்தில் கந்த சஷ்டித்திருவிழா, சூரசம்ஹாரம் மற்றும் 64ம் ஆண்டு லட்சார்ச்சனை திருவிழா நடந்தது.
சின்னவேடம்பட்டியில் கவுமார மடலாயத்தில் தண்டபாணி கடவுள் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு லட்சசார்ச்சனை நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா 64ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. 5 நாட்களாக திருமஞ்சன பூஜை, மாலையில் வேள்வி அர்ச்சனை, வேள்வி மூலாந்திர அர்ச்சனை பூஜைகள் நடந்தன. சூரசம்ஹாரத்தையொட்டி இன்று பிற்பகல் சண்முக அர்ச்சனை நடந்தது. மாலையில் வீரபாகு துாது நடந்தது. மாலை 4.30 மணி அளவில் குமரகுருபரக் கடவுள் எழுந்தருளி தாரகா சூரனையும், சிங்கமுக சூரனையும் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், சேவலும் மயிலுமாய் வலம் வரும் காட்சி நடந்தது. இரவு 7.00 மணிக்கு தெய்வானை தவசு காட்சி பூஜைகள் நடந்தன. திராளன பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று தெய்வானை திருக்கல்யாணம், பேரொளி வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிரவையாதீனம் செய்து வருகிறது.