பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
நகரி: திருப்பதி தேவஸ்தான போர்டின், புதிய தலைவராக, பாபி ராஜு, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பாபி ராஜுதலைமையிலான போர்டின், பதவிக் காலம் கடந்த வெள்ளியன்று முடிவடைந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, மாநில அரசு, புதிய போர்டின், நியமன உத்தரவை வெளியிட்டது. தன்னாட்சி நிர்வாகமாக விளங்கி வரும், திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் பதவியை கைப்பற்ற, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள், உட்பட பலர் முயற்சிசெய்தனர்.இந்நிலையில், நரசாபுரம் தொகுதி எம்.பி.,யும், ஏற்கனவே தலைவர் பதவியை வகித்தவருமான, கனுமுரி பாபி ராஜு,மீண்டும் தலைவராக நியமிக்கப் பட் டுள்ளார். புதிய போர்டின் உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.,க்கள் கமலா, பாமுல ராஜேஸ்வரி, ராஜி ரெட்டி மற்றும் சிவப் பிரசாத், கண்ணைய்யா, தேஷ்பாண்டே, லட்சுமணராவ், ரேபால சீனிவாஸ், சிட்டூரி ரவீந்திரா, ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.