பதிவு செய்த நாள்
31
அக்
2022
04:10
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகம் கடல் கொந்தளிப்பின் காரணமாக, கடல் நீரில் மூழ்கின.
தேவிபட்டினம் கடலுக்குள் ஒன்பது நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. நவபாஷாண நவக்கிரகம் என்று அழைக்கப்படும் இங்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமணத்தடை குழந்தை பாக்கியம் உள்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி, தை, அமாவாசை தினங்களில், முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவக்கிரகங்கள் அமைந்துள்ள பகுதியில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக, கடல் நீர்மட்டம் உயர்ந்து நவக்கிரகங்கள் அனைத்தையும் கடல் நீர் மூழ்கடித்துள்ளன. கடல் கொந்தளிப்பு காரணமாக நவபாஷாணத்திற்கு வரும் பக்தர்கள் கடலுக்குள் இறங்கி நவக்கிரகங்களை சுற்றிவர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் நவக்கிரகங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களை கடலுக்குள் இறங்கி சுற்றி வர முடியாமல், கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள நடைமேடை வழியாகவே நவக்கிரங்களை சுற்றி வந்து தரிசனம் செய்து சென்றனர்.