அவிநாசி: திருமுருகநாதர் மற்றும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்களில் கந்த சஷ்டி நிறைவு நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி திருவிழா அக்.26ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு திருமுருகநாதசுவாமி கோயிலில் தினசரி காலை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் நடைபெற்று வந்தது. நேற்று முருகப்பெருமான் நான்கு வீதிகளும் சுத்தி வந்து சூரனை வதம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை திருக்கல்யாணத்திற்காக திருமுருகன்பூண்டி கோவில் வளாகத்தில் திடல் அமைத்து வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதன் எழுந்தருளினார். இதனையடுத்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் சண்முகநாதர் வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் கட்டினார். மேலும், சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் அட்சதை தூவி அரோகரா கோஷத்தோடு சண்முகநாதரை வழிபட்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் மொய் பணம் எழுதுதல், பாத காணிக்கையடுத்து. வெள்ளையானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருக்கல்யாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாணம் நிகழ்ச்சி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய கல்யாண சுப்ரமணியருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் வேதபாராயணம்,மங்கல இசைகள் வாசிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம், மாங்கல்ய சரடு உள்ளிட்டவைகள் வழங்கினர்.