சிதம்பரம் ஸ்ரீமத் பாம்பம் சுவாமி கோவிலில் 111ம் ஆண்டு மகா கந்தசஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2022 01:11
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீமத் பாம்பம் சுவாமி கோவிலில் 111 ம் ஆண்டு மகா கந்தசஷ்டி விழாவையொட்டி யாகம் மற்றும் ஊஞ்சல் உற்வசம் நடந்தது.
சிதம்பரம் சீர்காழி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீமத் பாம்பம் சுவாமிகள் மடாலயத்தில் 111 ம் ஆண்டு மகா கந்தசஷ்டி விழா கடந்த25 ம் தேதி கெரியேற்றத்துடன் துவங்கியது. விழாவை தொடர்ந்து தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் திருமுருகன் விதியுலா புறப்பாடு நடந்தது. முக்கிய விழாவான திருக்கல்யாணம் நேற்று நடந்தது விழாவையொட்டி காலை 5 மணிக்கு ஆறுகால பூஜை நிறைவு பெற்று தீபாராதனை நடந்தது. மதியம் ஸ்ரீ தெய்வாணை திருக்கல்யாணம் உற்சவ வைபவம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் பங்கேற்ற யாகம் மற்றும் கூட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மதியம் செய்திருந்தனர். அன்னதான விழாவுடன் நிகழ்வு முடிந்தது. டிரஸ்டி பசுபதி மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.