பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இக்கோயிலில் அக்டோபர் 25 இரவு 8 மணிக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது தினமும் இரவு 8 மணிக்கு சுவாமி பல்வேறு அலங்காரங்களில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9:45 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தார். அப்போது வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தீப ஆராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.