பதிவு செய்த நாள்
05
நவ
2022
08:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 7 ம் தேதி முதல், இரண்டு நாட்களுக்கு, அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 7 மற்றும், 8ம் தேதி பவுர்ணமி திதி உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 7ம் தேதி அன்னாபிேஷகம் நடக்க இருப்பதால், அன்று பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை, 6:00 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், அன்று பக்தர்கள் அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்ய ஏதுவாகவும், வரும், 7 மற்றும், 8ம் தேதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பவுர்ணமி தினத்தன்று, எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படாது.