இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2022 06:11
மதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஐப்பசி மாதம் சனிக்கிழமை வளர்பிறை மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான் மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி அபிஷேகம் அலங்காரம் ஆராதனை தீபாராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி கோயில் பிரகாரத்தை மூன்று முறைவலம் வந்து தீபாராதனை நடைபெற்று பிரதோஷம் பூஜை நிறைவு பெற்றது. இந்த வழிபாட்டில், பக்தர்கள், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.