பதிவு செய்த நாள்
06
நவ
2022
11:11
போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு பனிலிங்கம் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி மஹாசனிப்பிரதேசத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்றார். ஆவின் தலைவர் ராஜா பிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி ஆகியோர் செய்திருந்தனர்.
* பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் மஹா சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நிறுவனர் மகாஸ்ரீராஜன் பூஜைசெய்தார். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்ப பூஜை, பெரியகுளம் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.