பரமக்குடி: பரமக்குடி ஓட்டப்பாலம் அருகில் வசந்தபுரம் பகுதியில் அருள்பாலிக்கும் சத்தியபாமா, ருக்மணி சமேத நந்தகோபால கிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.
இக்கோயிலில் நேற்று காலை உற்சவர், மூலவர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து நந்தகோபாலகிருஷ்ணர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து ருக்மணி சத்தியபாமா ஆகியோருடன் திருக்கல்யாண விழா நடந்தது. பின்னர் கல்யாண சடங்குகள் நிறைவடைந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு யாதவ வர்த்தக சங்க தலைவர் ராமு, கோயில் அர்ச்சகர் மேகநாதன் உள்ளிட்டோர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நந்தகோபாலகிருஷ்ண அறக்கட்டளை, யாதவர் வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.