கோரக்கர் சித்தர் கோவிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2022 04:11
நாகப்பட்டினம்: நாகையில், பிரசித்திப் பெற்ற கோரக்கர் சித்தர் கோவிலில் நடைபெற்ற ஐப்பசி பரணி அன்னாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் பிரசித்திப் பெற்ற கோரக்கர் சித்தர் கோவில் அமைந்துள்ளது.18 சித்தர்களில் முதன்மை சித்தரான கோரக்கர், போகரின் ஆசி பெற்று, வடக்கு பொய்கை நல்லூரில் ஜீவசமாதி அடைந்ததாக ஐதீகம். இக்கோவிலில் ஐப்பசி, பவுர்ணமி பரணி விழா அன்னாபிஷேக நிகழ்ச்சியுடன் துவங்கியது. கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோரக்கர் சித்தருக்கு மங்கள பொருட்கள் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சங்கொலி நாதம் முழுங்க, கோவில் மணிகள் ஒலிக்க தீபாரதனை நடைபெற்றது. கோவிலில் வழக்கமாக நடைபெறும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். படையலிடப்பட்ட அன்ன பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.