ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, செட்டித் தெருவில் உள்ள விக்னேஷ்வரர் கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று, இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. 7:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், நாராயண ஹோமம், நவக்கிர ஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடந்தது. காலை 9:00 மணிக்கு கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம், மஹா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.