பதிவு செய்த நாள்
28
ஆக
2012
10:08
திருப்பரங்குன்றம்: மதுரை ஆவணி மூல திருவிழாவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பங்கேற்பதால், ஆக்., 31 வரை தங்கரதம் புறப்பாடு இல்லை. கோயிலில் பக்தர்கள் பணம் செலுத்தி தங்க ரதம் இழுக்கின்றனர். தங்கரத்தில் உலாவரும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மதுரையில் நடக்கும் ஆவணிமூல திருவிழாவில் பங்கேற்க ஆக., 26ல் சென்றனர். திருவிழா முடிந்து ஆக., 31ல் சுவாமி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்புவர். அன்றுவரை கோயிலில் தங்கரதம் புறப்பாடு இல்லை. கோயில் நடை வழக்கம் போல் திறந்திருக்கும்.
யானையின்றி சுவாமி புறப்பாடு: திருப்பரங்குன்றம் கோயிலுக்கு 1971ல் யானை அவ்வை வந்தது. அன்றுமுதல்(முதுமலை யானை முகாம்கள் நடைபெற்ற நாட்கள் தவிர) சுவாமி புறப்பாட்டின்போது யானை அவ்வை சுவாமியின் முன் செல்லும். இந்த ஆண்டு யானையின்றி சுவாமி மட்டும் மதுரைக்கு புறப்பாடானது.