கீழ்புவனகிரி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2022 06:11
புவனகிரி: புவனகிரி அடுத்த கீழ்புவனகிரி புதுத்தெரு ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த கீழ்புவனகிரி புதுத்தெரு ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இதற்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி மாலை 6.00 மணிக்கு மஞ்சள் வினாயகர் பூஜை,தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பூஜைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. 6ம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடந்தது. மாலை 5.00 மணிக்கு மேல் வாஸ்த்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 7.00 மணிக்கு மேல் விக்னவிநாயகர் பூஜையுடன் இரண்டாம் யாக சாலை பூஜைகள் நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளுக்குப்பின் கடம் புறப்பாடு துவங்கி, காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுபகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இன்று முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.